கொலன்னாவ பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களுக்கு அழுத்தம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்படும் பெற்றோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் உட்பட 16 தலைவர்களை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்க நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய கடந்த 26 ஆம் திகதி இவர்கள் 16 பேரும் வெலிக்கடை பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த நபர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பொலிஸார் பிணை வழங்கியிருந்தனர். எனினும் நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜரா கவில்லை. இதன் காரணமாக நீதிவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.