இவ்வருடம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 16ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி பரீட்சை நிறைவடையும் வரை குறித்த தடை நீடிக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் W.N.J. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பகுதிநேர வகுப்புகள், கருத்தரங்குகள், வினாத்தாள் செயன்முறைகள், வினாத்தாள் அச்சிடல், விநியோகித்தல் போன்ற செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தடைச்சட்டத்தை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சட்டத்தை மீறுவோர் தொடர்பான தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பரீட்சை திணைக்களத்தின் 1911 எனும் இலக்கத்துக்கோ உடனடியாக தகவலை வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் W.N.J. புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.