நாட்டில் காணப்படுகின்ற வறட்சி நிலைமை காரணமாக இதுவரை 17 மாவட்டங்களை சேர்ந்த 500,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேச வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவு கூப்பன் அட்டை வழங்கும் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், பயிர் செய்கை பாதிப்புக்களுக்காக உரிய காப்புறுதி திட்டத்தின் கீழ் துரித கதியில் நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கும், குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.