Top News

அரசமைப்பின் 20 க்கு எதிராக 10 மனுக்கள்?


அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளே இந்தப் பத்து மனுக்களையும் தாக்கல் செய்யவுள்ளனவென, தகவல் வெளியாகியுள்ளது.  
சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதனை, அரசமைப்பின் 20ஆவது
இம்மாத அமர்வுக்காக, கிழக்கு மாகாண சபை எதிர்வரும் 29ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய அமர்வின் போதே, இந்தப் பிரேரனையை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் முன் வைக்கவுள்ளார்.  
முன்வைக்கப்பட உள்ள அந்தப் பிரேரனையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
“அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஓரே நாளில் நடத்தும் வகையில், அரசமைப்பின் 20 ஆவது திருத்தமும் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவர அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.  
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில், குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை ஓரே நாளில் நடத்தும் வகையில், அதனைக் கலைக்கும் திகதியை நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
மாகாண சபைகளை, நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் ஜனநாயக விரோதமான முறையில் வைத்துக்கொள்வதற்கான முயற்சியாகவே இதனை கருதவேண்டும்.   
20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அடுத்த மாதம் பதவிக் காலம் முடிவடையவுள்ள கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட 3 சபைகளின் பதவிக் காலமும் நீடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  
கிழக்கு மாகாண சபையின் தற்போதைய ஆட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 5 வருடங்களாகும். மக்கள் வழங்கிய ஆணைக்குப் புறம்பாக, சபையின் பதவிக் காலம் நீடிப்பு என்பது ஜனநாயக மரபு அல்ல.  
எனவே, உத்தேசத் திருத்தங்களை ஜனநாயக விரோத செயல் என்று, சபை கருத வேண்டும். உத்தேச திருத்தங்களைக் கைவிட்டு கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் உரிய நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் கிழக்கு மாகாண சபை, அரசாங்கத்தைக் கோருகிறது” என, அந்தப் பிரேரனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம், அடுத்த மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடைய இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.   
Previous Post Next Post