மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத் தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு மாகாணசபைகளின் அங்கீகாரத்தையும் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. மாகாண சபைகளின் கருத்துக்களை கேட்டபின்னரே இதுதொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும் மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கான எந்த முயற்சிகளை யும் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத் தில் நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்காகவே 20 ஆவது திருத்த சட் டம் கொண்டுவரப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு மாகாணசபைக்கு தேர்தலை நடத்து வதற்கு 80கோடி ரூபா செலவாகிறது. மேலும் அரசியல் கட்சிகளின் நேரம், பொதுமக்களின் நேரம் என்பன வீணடிக்கப்படுகின்றன. எனவே ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதே சிறப்பாக அமையும்.
மேலும் 20 ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தோம். அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம் பாராளுமன்றத் தேர்தல் முறை மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் இந்த 20 ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டுவரப்படவேண்டும்.
கேள்வி: ஆனால் உங்களின் இந்த முயற்சியால் மாகாண சபைகளின் தேர்தல் பிற்போடப்படுகின்றதே?
பதில்: இல்லை அது எமது முயற்சியல்ல. மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். இதன்மூலம் மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதாக யாராவது உணர்ந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம்.
கேள்வி: நீதிமன்ற விவகாரம் ஒரு புறம் இருக்கட்டும். 20 ஆவது திருத்தச் சட்ட முயற்சியினால் பொதுவாகவே மாகாண சபைத் தேர்தல்கள் பிற்படுத்தப்படுகின் றன அல்லவா?
பதில்: அவ்வாறு கூற முடியாது. எமது முயற்சியானது தேர்தல்களை ஒரே தின த்தில் நடத்துவதை அடிப்படையாக கொண்டதாகும். மேலும் இந்த 20 ஆவது திருத்த சட்டத்திற்கு மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்திருக்கிறது. எனவே 20 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் மாகாண சபைகளின் கருத்துக்களும் பெறப்படும்.
கேள்வி: அப்படியாயின் 20 ஆவது திருத் தச் சட்டத்திற்கு சுதந்திரக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதா?
பதில்: மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை அழுத்தம் திருத்தமாக தெரிவித்து கொள்கின்றோம். மாறாக தேர்தலை பிற்போடும் எண்ணம் எமக்கில்லை.