ஆப்கானிஸ்தானில் மஸ்ஜித் மீது தாக்குதல்: 29 பேர் பலி; 63 பேர் காயம்

NEWS


ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 63 பேர் காயம் அடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையருகே உள்ள நகரம் ஹெராத். இங்கு ஷியா முஸ்லிம்கள் வழிபடும் ஜவாத்யா என்ற மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் நேற்று திடீரென இரண்டு மர்ம மனிதர்கள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலைப்படையாக வந்துள்ளான். மற்றொருவரும் துப்பாக்கியுடன் வந்துள்ளான்.

மசூதி வளாகத்திற்குள் நுழைந்ததும் தற்கொலைப்படையாக வந்தவர் தன்னுடைய உடலில் உள்ள வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மற்றொருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சராமரியாக சுட்டான். இதில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தானர். 63 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்துள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர் என்று ஹெராத் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

காபுலில் உள்ள ஈராக் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்ற ஓரிரு நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

6/grid1/Political
To Top