வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை அறிவிப்பார் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒரு சரியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு இலக்கானவர்கள் இராஜினாமா செய்வதுதான் சிறந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தனது கட்சியுடன் அன்பு வைத்திருந்தால், நாட்டுக்கு பற்று வைத்திருந்தால் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்காமல் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
தான் நிரபராதியாக இருந்தால், தன்மீது குற்றம் இல்லாதிருந்தால் தான் இருந்த அதே பதவியில் மீண்டும் பணியாற்ற முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் விடயத்தில் ஜனாதிபதி எடுத்த தீர்மானமும், இது குறித்து முன்னெடுத்த நடவடிக்கைகளையும் போன்று ஜனாதிபதி இன்னும் இருவாரத்தில் தீர்மானம் ஒன்றை அறிவிப்பார் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.