மன்னார்,எழுத்தூர் சந்தியில் 30 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது

TODAYCEYLON
மன்னார் – எழுத்தூர் சந்திப்பகுதியில் 30 கிலோ கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், கொழும்பு பொலிஸ் விசேட செயலணியினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக கொண்டு சென்றபோதே மூன்று பொதிகளில் வைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சாவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
6/grid1/Political
To Top