ஹஜ் கிரியைகளுக்காக சவூதி அரேபியாவிற்கு வருகை தந்த யாத்திரிகர்களுள் 35 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சவூதி ஹஜ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்முறை ஹஜ் கடமைகளுக்காக 675,143 பேர் வந்துள்ளாதாகவும் அவர்களில் 663,143 பேர் வான் மார்க்கமாகவும் 10,796 பேர் தரைமார்கமாகவும் 487 பேர் கடல் மார்க்கமாகவும் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு குறித்த வருகையானது கடந்த வருடத்தை விட 17 வீதம் அதிகமாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்ட விரோதமான முறையில் மக்கா நகரிற்குள் பிரவேசிக்க முயன்ற 95,400 சவுதி பிரஜைகளுக்கு மக்கா நகரிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஹஜ் பாதுகாப்பு படையின் கட்டளை அதிகாரி ஜெனரல் காலித் பின் காரா அல் ஹர்பி தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் ஜூலை 12 முதல் ஓகஸ்ட் 12 வரையான காலப்பகுதிக்குள் சட்ட விரோதமான முறையில் ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த 47,700 வாகனங்களை திருப்பி அனுப்பியதாகவும் கட்டளை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.