வடக்கு எகிப்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு ரயில் கெய்ரோவில் இருந்தும் மற்றைய ரயில் போர்ட்டிலிருந்தும் பயணித்த நிலையில், வடக்கு எகிப்தின் கரையோர நகரான அலெக்ஸான்ரியாவில் வைத்து குறித்த இரு ரயில்களும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
எகிப்தின் ரயில் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகின்றது. இவ்விபத்து நடைபெற்ற பகுதியில் மாத்திரம் 1249 ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு இப்பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே இப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அதிக எண்ணிக்கை எனவும் அவ்வாய்வு குறிப்பிட்டுள்ளது.