நிவாரண அமைப்பின் ஊடாக வவுனியாவில் 5 மாடு,5 ஆடு வழங்கிய காதர் மஸ்தான் (பா.உ)

TODAYCEYLON


வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பத்து பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உதவிகள் இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது, இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் நிதி உதவியுடன் 5 பேருக்கு மாடுகளும், 5 பேருக்கு ஆடுகளும் வழங்கப்பட்டன.
பெரியதம்பனை, பாலமோட்டை, பாவற்குளம், ஆண்டியபுளியங்குளம், காக்கையன்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கே இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

6/grid1/Political
To Top