Top News

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பம்


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்பரீட்சை, இரண்டு வினாப் பத்திரங்களைக் கொண்டது. முதலாவது வினாப் பத்திரம் காலை 9.30 மணி முதல் காலை 10.15 வரையில் 45 நிமிடங்கள் நடைபெறும்.
இரண்டாவது வினாப் பத்திரம் 10.45 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 1 மணியும் 15 நிமிடங்கள் இடம்பெறும்.
காலை 9.00 மணிக்கு பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பரீட்சை மண்டபத்தினுள்ளே அமர்வார்கள்.
விடை எழுதுவதற்கு பேனா அல்லது பென்சில் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்த முடியும் என பரீட்சார்த்திகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பெற்றோர் பரீட்சை மண்டபம் அமையப் பெற்றுள்ள பிரதேசத்திற்குள் பிரவேசிக்க கூடாது என பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாணவர்களின் இடைவேளை நேரத்திலும் பெற்றோர் பரீட்சை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பரீட்சை தொடர்பிலான மேலதிக அறிவுறுத்தல்கள் பெற வேண்டியிருப்பின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பெற்றோர் தொடர்புகொள்ளலாம் எனவும் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொள்ள  : 1911
பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழு      : 0112 784208 / 0112 78 45 37 / 0112 31 88 350 / 0112 31 40 314
பொலிஸ் நிலையம்      : 0112  42 11 11
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கம்   : 119
Previous Post Next Post