வரட்­சியால், அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்டுள்­ள­தா­கவும், இவர்­களுக்கு தொடர்ந்தும் பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார்.  
அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது நிலவும் வரட்சிக் கால நிலை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. தற்­போது பொத்­துவில், திருக்­கோவில், ஆலை­ய­டி­வேம்பு, அக்­க­ரைப்­பற்று, நாவி­தன்­வெளி, தமண, அம்­பாறை. மகா-­ஓயா, பதி­யத்­த­லாவ, உகன, லாகு­கல ஆகிய 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளி­லுள்ள சுமார் 16 ஆயிரம் குடும்­பங்­களைச் சேர்ந்த மொத்தம் 50 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.  
பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு தொடர்ந்தும் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது.
 அனர்த்த முகா­மைத்­துவ      அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டில், பிர­தேச செய­ல­கங்கள் இப்­ப­ணியை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன. வரட்சிப் பிர­தேச மக்­களின் தேவைக்­கேற்ப பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.   
இதே­வேளை, வரட்சி கார­ண­மாக கிழக்கு மாகாணத்;திலுள்ள சிறிய பெரிய குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்­நி­லைகள் என்­ப­ன­வற்றின் நீர்­மட்டம் வெகு­வாகக் குறைந்து வரு­வ­தாக அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர். வரட்சி கார­ண­மாக காட்டு மிரு­கங்­களும் குடி­நீ­ரின்றிப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.  
தற்­போ­தைய வரட்சிக் கால­நிலை தொடர்ந்து நீடிக்­கு­மானால், எதிர்­வரும் பெரும்­போக நெற் செய்கை வெகு­வாகப் பாதிக்­கப்­படும் என அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். கடந்­த­கால வரட்சி காரணமாக இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட 42 வீதமான காணிகளிலயே நெல் செய்கை பண்ணப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.