Top News

தென் கொரியா + இஸ்ரேலிலிருந்து 5200 இலங்கையர்கள் தப்பிச்சென்றுள்ளதாக அறிவிப்பு

தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உபுல் தேஷப்ரிய கருத்து தெரிவித்தபோது தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்று செல்லும் இலங்கையர்கள், அந்த தொழில் ஸ்தலங்களில் இருந்து தப்பிச்சென்று வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணியாற்றுவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொரியாவில் வேலைவாய்ப்புகளை பெற்றுச்சென்ற 5000 பேர் வரை இலங்கையர்களும் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை பெற்றுச் சென்ற மேலும் 200 பேரும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்த நிலை தொடரப்பட்டால் அந்த நாடுகளில் இலங்கையர்களுக்காக வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்தார்.
இவ்வாறு தப்பிச் சென்றுள்ள நபர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அந்த பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உபுல் தேஷப்ரிய மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post