Top News

உசைன் போல்ட்டின் சவாலை 72 மணித்தியாலத்தி்ற்குள் முறையடித்த அமெரிக்கா வீரர்


என்னை யாரும் தோல்வி அடைய செய்ய முடியாது என உசைன் போல்ட் மூன்று நாட்களுக்கு முன் சவால் விட்டு இருந்தார் இருப்பினும் அந்த சவாலை 72 மணித்தியாலத்திற்குள் முறையடித்த அமெரிக்கா வீரர் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார் 
உலக தடகள போட்டியின் 100மீட்டர் ஓட்டப்போட்டியில்   ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லினிடம் தங்கப்பதக்கத்தை பறிகொடுத்து மூன்றாமிடம் மட்டுமே பிடித்து அதிர்ச்சியளித்தார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் 16-வது உலக தடகள போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. 205 நாடுகள் பங்கேற்கும் இதில் 24 போட்டிகள் இடம் பெற்றுள்ளன. பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டத்தில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான உசேன் போல்ட், ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலக தடகளத்தில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளியிருக்கும் இவர், தோற்கடிக்கப்படாமல்
விடைபெறுவேன் என போட்டிக்கு முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், மிக முக்கிய போட்டியான 100மீ ஓட்டப்பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில், அமெரிக்க வீரர் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்து அதிர்ச்சியளித்தார்.
இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், ரசிகர்கள் போல்ட்டுக்கு சிறப்பான மரியாதையுடன் பிரியாவிடை அளித்தனர்.
போல்ட்டின் போட்டியாளராக இருந்து வந்த 35 வயதான ஜஸ்டின் கட்லின் 2006 முதல் 2010 ஊக்க மருந்து குற்றச்சாட்டில் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post