Top News

இலங்கை வானில் எதிர்வரும் 7ம் திகதி திங்கள் கிழமை ஏற்பட போகும் மாற்றம்!

எதிர்வரும் 7 ஆம் திகதி இரவு அரைகுறையான சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும் இதனை இலங்கையர்கள் காணும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் வானியல் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணம் எதிர்வரும் 7 ஆம் திகதி இரவு 9.20 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 2.21 மணி வரை நீடிக்கும். இரவு 10.53 அளவில் கிரகணத்தை தெளிவாக வானில் காணமுடியும்.

சந்திரனின் 25 வீத பகுதியை பூமியின் நிழல் மறைக்கும் எனவும் இதனை 11.51 அளவில் மிகவும் தெளிவாக காணமுடியும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கை உட்பட ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், ஆபிரிக்க நாடுகள், அவுஸ்திரேலிய நாடுகளில் காணமுடியும்.
அடுத்த சந்திர கிரகணம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் ஜூலை 27 ஆம் திகதிகளில் இரண்டு முழுமையான சந்திர கிரகணங்கள் எற்பட உள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post