சீனாவின் மேற்குப் பகுதியில் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருக்கலாம் என்றும் சீன அரசாங்க செய்திகள் தெரிவித்துள்ளன.
இதுவரை 8 பேருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 88 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் சிச்சுவான் மாகாண உத்தியோகபுர்வ செய்திச் சேவை அறிவித்துள்ளது.
உயிரிழந்த 8 பேரில் ஐவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எனவும் அச்செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
சுமார் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ள இப்பூமியதிர்ச்சி, பொதுமக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஏற்பட்டுள்ளதனால் உயிர்ச் சேதம் அதிகமாக இருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.