Top News

அமைச்சர் நசீரினால்; 8.2 மில்லியன் ரூபாவில் இலங்கை துறைமுகத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு



















      சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்இலங்கைத்துறை முகத்துவாரம்
(லங்காபட்டிடனம்) பிரதேசத்தில் கிழக்குமாகாணத்தில் சுகாதார அமைச்சின் முயற்சியில் அமைக்கப்பட்ட புதியஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (09)இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முயற்சியின் தேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் 8.2மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அலுவலகம் மூலம் நல்லாட்சி அரசில் அதிகமான சேவைகளைகிழ்ககு மாகாணம் போன்ற ஏனைய மாகாணங்களுக்கும் இவ்வலுவலகத்தின்தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவினால் நிதிஒதுக்கீடு செய்யப்படுவதை பெரும் மகிழ்வுடன் பாராட்டுகின்றோம்அதுஸ்ரீலங்கா முஸ்ளிம் காங்கிரஸ்தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற இரண்டுபெரும் சிறுபான்மை இனத்தவரின் கட்சிகளின் அதிகாரங்களும் மிகசிறப்பான முறையில் எமது கூட்டாசியை மிக சிறந்து முறையில் மூவினமக்களுக்குமான சேவைகள் மேற்கொண்டு வருகின்றோம்.

 அது போல் இருகட்சிகள் மாத்திரம் இன்றி இதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்சுதந்திர கூட்டமைப்பு போன்ற இரு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சிஅரசிலை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வைத்தியசாலை சுமார் 05 கிலோமீட்டருக்கு மேல் உள்ள ஈசலம்பற்று செல்ல விருந்த நிலையையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற இப்பிரதேச மக்கள் நண்மை கருதியுமே இவ்வைத்திய சேவையை வழங்குகின்றோம்.

என கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் .எல்முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர்அஹமட்கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்முஹம்மட்நஸீர்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானிகிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான நடராஜாஜானதர்த்தன்கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சின் மாகாணப்பணிப்பாளர் முருகானந்தன்திருகோணமலைபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கயல்வெளிவைத்தியஅத்தியட்சகர்அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் பொதுமக்களும் இதன்போது கலந்துகொண்டனர்




சப்னி அஹமட்




Previous Post Next Post