Top News

பாராளுமன்ற விவாதத்தைக் குழப்பும் வகையில் வெளிநாட்டுத் தூதரகம் செயற்பட்டதா?


அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் நடக்கவிருந்த விவாதம் குழப்பப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு தூதரகம் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டு வரைவு குறித்த விவாதம் கடந்த மாதம் 28ஆம்
 நாள் பாராளுமன்றத்தில் நடக்கவிருந்தது. எனினும் கூட்டு எதிரணியினர் 
குழப்பம் விளைவித்ததால், விவாதம் நடத்தப்படாமல் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றை அடுத்தே, கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தில் குழப்பம் விளைவித்து உடன்பாடு குறித்து விவாதம் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜெயசேகர கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாராளுமன்ற விவாதத்தைக் குழப்பும் வகையில் வெளிநாட்டுத் தூதரகம் செயற்பட்டதா என்பதை கண்டறியும் விசாரணைகளை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வெளிவிவகார அமைச்சிடம் பிரதமர் ரணில் உத்தரவிட்டுள்ளார்.
Previous Post Next Post