அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
உத்திர பிரதேச அரசு தன் தவறை மறைக்க டாக்டர் கஃபீல் கானை பலிகடா ஆக்கியுள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹர்ஜித்சிங் பாட்டி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதியநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஆக்ஸிஜின் எனும் பிராண வாயு பற்றாக்குறை ஏற்பட்டு கடந்த மூன்றே தினங்களில் சுமார் 60க்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள்.
ஆக்சிஜன் நிறுவனங்கள் அனைத்தும் ஆக்சிஜன் சப்ளை கைவிரித்துவிட்ட நிலையில் மேலும் பல குழந்தைகள் பலியாகக்கூடும் என அஞ்சிய தலைமை குழந்தை நல மருத்துவர் கஃபீல்கான் என்பவர் அவரது தனிப்பட்ட முயற்சி மேற்கொண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு தன் வாகனத்திலேயே சென்று தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன்கள் பெற்றுக்கொண்டு வந்து உயிருக்கு போராடிய மீதமுள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் செலுத்தி மேலும் உயிர் பலி ஏற்படாமல் தடுத்திருந்தார்.
ஆபத்தான நேரத்தில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய டாக்டர் கஃபில்கானுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், அவர் திடீரென பணி நீக்கம் செய்யபப்ட்டார்.
உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலும் சில உயிர்கள் பலியாகாமல் தடுத்ததற்காக நாடெங்கும் டாக்டர் கஃபீல் கானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் டாக்டர் கானை நீக்கி உத்திர பிரதேச அரசு எடுத்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் டாக்டர் கஃபீல் கான் நீக்கத்திற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசின் நிர்வாக சீர்கேட்டை மறைக்க டாக்டர் கஃபீல்கானை பலிகடா ஆக்கியுள்ளது என்று அந்த மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்ட்ர ஹர்ஜித்சிங் பாட்டி கூறுகையில், மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாமைக்கு எப்படி டாக்டர்களை மட்டும் குறை கூற முடியும்?. தவறு எல்லா தரப்பிலும் உள்ளது. இதன் பின்னணியில் சில் அதிகாரிகளும் இருக்கக் கூடும் எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.