(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் 17.08.2017 அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சந்தேக நபர்களிடமிருந்து 100 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் 30 க்கும் மேற்பட்ட கேரள கஞ்சா பைக்கற்றுக்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இப்போதை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் ஒரு போதை மாத்திரை 500 ரூபாவுக்கு விற்கப்பட்டு வந்துள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ள ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேற்படி சந்தேக நபர் போதைப்பொருட்களை 3 நாட்களுக்கு ஒரு தடவை கொழும்பிலிருந்து கொண்டுவருவதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய சந்தேகத்தை அடுத்தே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தேக நபர் 18.08.2017 அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.