மூன்று மாதங்களில் மீண்டும் அமைச்சு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட பின்னரே ரவி ராஜினாமா செய்துள்ளார்..

TODAYCEYLON

இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர் ,

இன்னும் மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்த பின்னரே ரவி தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். 

முன்னதாக திலக் மாரப்பன பதவியை ராஜினாமா செய்தார் பின்னர் பின் வாசலால் வந்து அவர் மீண்டும்அமைச்சைப்பெற்றார்தற்போது ரவி ராஜினாமா செய்துள்ளார்.அடுத்து ராஜினாமா செய்யும் அமைச்சை ரவிபொருப்பேற்பார்.இது தான் இவர்களின் நல்லாட்சி. 

எல்லாம் நாடகம் இவர்களை இனிமேலும் நம்ப மக்கள் மடையர்கள் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top