2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமிடல் செயற்பாடுகள் நிதி அமைச்சர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வரவு செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின்போது அனைத்து நிறுவன பிரதிநிதிகளினதும் பொதுமக்களதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அனைத்து அமைச்சுகளினதும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு விபரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது.
மதிப்பீட்டு தகவல்களுக்கு அமைய அடுத்த வருட வரவு செலவு திட்டம் 2 ஆயிரத்து 98 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை இவ் வருட செலவீனங்களுக்காக இரண்டாயிரத்து 732 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.