சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அணைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிக்குகள் பகுதி ஒருங்கிணைப்பாளர் தம்பிடியே சுகானந்த தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தேரரின் பிணை மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யாதிலக குறித்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
இதேவேளை, சந்தேக நபரான தேரரை 10,000 ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்சம் பெறுமதியான 3 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தேரருக்கு டிசம்பர் மாதம் முதல், ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நீதிபதி நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என தெரிவித்தார்.
சட்டத்தை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் செயற்படுவது தேரர் ஒருவருக்குப் பொருத்தமான விடயமல்ல எனவும் மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்யாதிலக மேலும் தெரிவித்தார்.