முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழலைவிசாரணை செய்ய கோரும் விஷேட நீதிமன்றில் முதலாவதாக ராஜிதவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளமுறைப்பாடுகளை விசாராணை செய்ய வேண்டும் என மாத்தறை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் காஞ்சனவிஜேசேகர குறிப்பிட்டார்.
நேற்று (19) மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழலை விசாரணைசெய்ய கோரும் விஷேட நீதிமன்றம் மூலம் இலங்கையின் நீதிக் கட்டமைப்பைகேள்விக்குட்படுத்தப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் ஊழல்கள் இடம்பெற்றதான மிகப்பெரும் குற்றச்சாட்டுக்களைமுன்வைத்தார்கள்.இவ் ஆட்சியமைந்த நாள் முதல் அதனை கண்டு பிடிக்க இல்லாத பொல்லாதமுயற்சிகளை மேற்கொண்டார்கள்.மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்கள் விசாரணைக்கு சென்றேஅலுத்துவிட்டார்கள்.
தற்போது மஹிந்த ராஜபக்ஷ ஆதவாளர்களின் சுன்டு விரலைக் கூட அசைக்க முடியவில்லை. எம்மை ஊழல்வாதிகளென ஆட்சிக்கு வந்த இவர்களால் இந்த செய்தியை மக்களிடம் கூற முடியாது.நாங்கள் ஊழல்வாதிகள் என்ற மக்கள் மனோ நிலையை பேண ஏதாவது செய்ய வேண்டும்.அந்த வகையில் தான்இவ்வாறான கருத்தை பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.இக் கோரிக்கையினூடாக நாங்கள் குற்றமற்றவர்கள்என்ற செய்தியை நன்கு சிந்திப்போரால் அறிந்துகொள்ள முடியும். இருந்த போதிலும் இதன் பாரதூரம் பற்றிஇவர்கள் அறியாமல் பேசுகிறார்கள்.
யுத்த மீறல்களை விசாரணை செய்த இலங்கை தமிழ் மக்கள் சர்வதேச நீதி மன்ற கோரிக்கையைமுன்வைத்து வருகின்றனர். இலங்கை நீதிமன்றத்தால் தங்களுக்கு நீதியை நிலை நாட்ட முடியாது என்பதேஅவர்கள் முன்வைக்கும் காரணம். முன்னாள் ஜனாபதி மஹிந்தவின் விடயத்தில் நீதியை நிலை நாட்டஇலங்கையில் விசேட நீதிமன்றத்தின் தேவை உணரப்படுகின்ற போது தமிழ் மக்கள் சர்வதேச நீதிமன்றத்தைநாடுவதில் தவறில்லை.
குறித்த விசேட நீதிமன்ற கோரிக்கையினூடாக இலங்கை நாட்டுக்கு மிகவும் பாதகமான தமிழ் மக்களின்கோரிக்கை நியாயப்படுத்தப்படுகிறது.இவ் ஆட்சியாளர்கள் தங்களது சுயநலத்துக்காக நாட்டை ஆபத்தின்விழிம்பிற்கு கொண்டு செல்வதை அறிந்துகொள்ளலாம். இதனூடாக தற்போதைய இலங்கை நீதித் துறைகட்டமைப்பானது நீதியை நிலை நாட்ட பொருத்தமானதல்ல என்ற செய்தியையும் கூறிச்செல்கிறது.இதுவெல்லாம் நல்ல சேதிகளல்ல.
எங்களுக்கு அரசியலமைப்பில் இல்லாத புதுமையான விசேட நீதிமன்றம் அமைப்பதை விடுத்து முதலில்இவ்வாட்சியாளர்களுக்கு அமைக்க வேண்டும். அப்படி நீதியான விசேட நீதிமன்றமொன்றை அமைத்தால்முதலில் கடற்றொழில் அமைச்சுக்கு சொந்தமான நில அபகரிப்பு தொடர்பில் அமைச்சர் ராஜிததான்மாட்டிக்கொள்வார் என அவர் குறிப்பிட்டார்.