Top News

மோட்டார் சைக்கிள், இணையம் மீதான வரி குறைப்பு


இணையச் சேவைகளுக்காக அறவிடப்பட்டு வந்த 10% தொலைத்தொடர்பு வரியை முற்றாக நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வரி குறைப்பு செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் அமுல் படுத்தப்படும்.
தற்பொழுது கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது இந்த அறிவிப்பை நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை, சிறிய லொறி மற்றும் கப் (Cab) ரக வாகனங்கள் மீதான வரியை 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 இலட்சமாக உள்ள குறித்த வரி 7 இலட்சமாக குறைக்கப்படவுள்ளது.
மேலும் 150 CC ஐ விட இயந்திர கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 90 வீதத்தால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் இதன்போது அறிவித்தார். மோட்டார் சைக்கிள் வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post