கூட்டு எதிரணியினர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஆயிரம் முறை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கவேண்டும் ஞானசார தேரருக்கு நாட்டில் விஷேட சட்டம் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இன்று நன்பகல் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற திருமண நிகழ்வு இந்தோகலந்துகொண்ட அவரிடம் ஞானசார தேரர் நீதிமன்ற அனுமதியின்றி ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில்பிரமுகர் ஒருவர் குறிப்பிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டார்.
எமது அரசாங்காத்தில் ஞானசார தேரரை பாதுகாத்தவர்கள் இந்த அரசாங்கத்தில் அவருக்கு ராஜதந்திர அந்தஸ்து பெற்றுக்கொடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவும் அங்கு கடும் விசனம் வெளியிட்டிருந்தார்.