உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

TODAYCEYLON
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில்  மணியரசன் குளத்தில் நீர் வெளியேறும் பகுதியில்,  நீரில் மூழ்கி உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்று (12)  காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, சடலமும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, மணியரசன் குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சபுறுள்ளா சதாம் (21 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், கடந்த 6 நாட்களுக்கு முன்னர் கிண்ணியா - குரங்கு பாஞ்சான் பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லையென குடும்பத்தினர், முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6/grid1/Political
To Top