Top News

வெளி­வி­வ­கார அமைச்­சரை பதவி நீக்கம் செய்­ய­வேண்டும் : தினேஷ் குண­வர்த்­தன


வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக் ­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ரவு தரு­வ­தாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எமக்கு  தெரி­வித்து வரு­கின்­றனர். அதனால் எம்மை   வெற்­றி­கொள்ள முடியும் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன  தெரி­வித்தார். 

தற்­போ­தைய நிலை­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் பதவி விலகி செல்­வதே மேலாகும். இல்­லா­விடின் ஜனா­தி­பதி அவரை பதவி  நீக்கம் செய்­ய­வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.  அத்­துடன்  எதிர்­வரும்  8 ஆம் திகதி   இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான  விவாதம் தொடர்பில்  கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு   கட்சித் தலை­வர்­க­ளுக்கு  சபா­நா­யகர் அழைப்பு விடுத்­துள்ளார் என்றும்  குறிப்­பிட்டார். 
வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பாக  குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 
அவர்  இது­தொ­டர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்;-
இதற்கு முன்­னரும் இரண்டு தட­வைகள்  நாங்கள் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்­துள்ளோம். ஒரு­முறை எங்­களால்  அதனை விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தவும் முடி­ய­வில்லை. இரண்­டா­வது தடவை  ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை   விவா­தத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டது.
ஆனால் அதனை வெற்­றி­கொள்ள முடி­ய­வில்லை.  எவ்­வா­றெ­னினும் இம்­முறை நாங்கள் கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நிச்­சயம் வெற்­றி­கொள்ள முடியும். காரணம் இம்­முறை இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக  வாக்­க­ளிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களும் தயா­ராக உள்­ளனர். அவர்கள் எம்மை தொடர்பு கொண்டு தாம்   இதற்கு ஆத­ரவு அளிக்கத் தயார் என்று கூறி­யுள்­ளனர். 
அவர்கள் எம்­மிடம் கூறி­ய­தால்தான் நான் இதனைக் கூறு­கின்றேன்.  அது­மட்­டு­மன்றி இந்த நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ரணை தொடர்­பாக  கலந்­து­ரை­யா­டவும்  விவாதம் நடத்­து­வ­தற்­கான திக­தியை தீர்­மா­னிப்­ப­தற்கும் எதிர்­வரும் 8ஆம் திகதி கட்சித் தலை­வர்­க­ளுக்கு சபா­நா­யகர் அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.   அந்த வகையில் அன்­றைய தினம் விவாதத் திகதி தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­படும்.  அதா­வது இந்த  பிரே­ரணை  விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தா­கவே  அமைச்சர் கரு­ணா­நா­யக்க பதவி விலகி செல்­வது நன்­றாக இருக்கும்.  அப்­படி அவர் செல்­லா­விடின்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன அவரை  பதவிநீக்கம் செல்லவேண்டும் என்றார்.  
வெளிவிவகார  அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின்  32 பேரின் கையொப்பங்களுடன்  நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post