அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்தினால் அடையாளமே தெரியாத அளவுக்கு மிகக் கடுமையான பதிலடியை நாங்கள் பரிசாகத் தருவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை எச்சரித்துள்ளார்.
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை வட கொரியாவும் அதன் தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா – வட கொரியா இடையிலான சமீபத்திய மோதலில் இந்த எச்சரிக்கைப் பேச்சுக்கள் புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளன.
தங்களது இராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாகவும், வட கொரியா தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தினால் உடனடியாக அது பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, எங்களது பாதையில் கிம் குறுக்கிடாமல் இருப்பார் என நம்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் வரலாறு காணாத நஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.