ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் 8.6 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் இறக்காமம் வரிப்பத்தான்சேனைக்கு இடையிலான 3.3 கிலோமீட்டர் வீதி அபிவிருத்தி செய்யபடவுள்ளது
அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் இந்த வீதி அபிவிருத்திக்கான பகிரங்க விலைமனுவை கோருவதில் கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட மாகாண அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்த முற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
திணைக்கள அதிகாரிகள் விலைமனுவை பகிரங்கமாக கோராது அதற்கு பதிலாக மாகாண அமைச்சர் ஒப்பந்த காரை தான் தெரிவு செய்து தருவதாகும் நிருவாக நடைமுறை தேவைக்காக விலைமனுவை கோருவதுடன் தனக்கு தெரிந்த ஒப்பந்த காரர்களை விண்ணப்பிக்க செய்வதாகவும் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளருக்கு கூறி இருப்பதுடன் அதனை செய்யுமாறு பணிப்புரை விடுத்ததாக அறிய முடிகிறது
மேலும் தான் தெரிவு செய்யும் ஒப்பந்த காரர் தரகு பணமாக தரும் பத்து வீதத்தில் ஐந்து வீதத்தை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறப்படுகின்றது
இதனை அறிந்த இறக்காம வரிப்பத்தான்சேனை மக்களும் அம்பாறை மாவட்ட பிரதான ஒப்பந்த காரர்களும் கவலையும் ஆத்திரமும் அடைந்ததுடன் மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்க்களை பணிப்பாளரை சந்த்தித்து வினவியாதாகவும் அதற்கு அவர் மழுப்பலான பதிலை வழங்கியதால் திருப்தி அடையாத மக்கள் மற்றுமொரு ஊழல் மோசடியை தவிர்க்கும் பொருட்டு எதிர் வெள்ளிகிழமை ஜும்மா தொழுகையின் பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
குறிப்பாக இந்த ஆர்ப்பாட்டம் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருக்கும் மாகாண அமைச்சருக்கும் எதிராக மேற்கொள்ள முஸ்தீப்புக்கள் நடை பெறுவதாக கூறப்படுகிறது