அலுவலக செய்தியாளர்
சிலோன் முஸ்லிம் அலுவலகம் மீதான தாக்குதல் விசாரணையை விரைவு படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் கையொப்பமிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்,
ஊடகங்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பது மாத்திரமல்லாது இது தொடர்பில் விசாரணை செய்யுமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அன்றைய தினமே அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் விசாரணைகளை செய்தது குறிப்பிடத்தக்கது, இது தொடர்பில் அக்கரைப்ற்று பொலிஸ் நிலையத்திற்கு மேற்படி வாக்குமூலம் பதிவதற்காக பிரதம ஆசிரியர் நேற்று முன்தினம் அழைக்கப்பட்டிருந்தார். (13.08.2017) மேலதிக தகவல்களை பொலிசாருக்கு வழங்கியது மாத்திரமல்லாது பாதுகாப்பு கருதி அட்டாளைச்சேனை பிராந்திய காரியாலயத்தை மூடியுள்ளதாகவும் பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.