ஹுஸைன் றிஸ்வி (அம்பாரை செய்தியாளர்)
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பிக்அப் வாகனம் காரைதீவைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலாளரினுடையதாகும்.
திருக்கோவிலுக்குச் சென்று அரச காரியமொன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சுற்றுவட்டத்தில் இவ்விபத்து சம்பிவித்துள்ளது. விபத்து இடம்பெற்ற சமயம் திருக்கோவில்பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் வண்டியிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு சுற்றுவட்டத்தினால் ஊருக்குள் செல்ல முற்படுகையில் கல்முனைப்பக்கமிருந்து மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் இருவர் வந்தமை குறிப்பிடத்தக்கது. பைசிக்கிளில் பின்னாலிருந்துவந்த இளைஞர் வேகமாக தூக்கிவீசப்பட்டு பிரதேச செயலாளரின் வாகன இருக்கையின் முன்னாளுல்ல கண்ணாடியில் வீழ்ந்துள்ளார். அதனால் கண்ணாடி நொருங்கி சேதமானதுடன் குறித்த இளைஞனும் காயமானார்.
ஒருவர் தலைக்கவசத்துடனும் மற்றவர் தலைக்கவசமில்லாமலும் பயணித்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. காரைதீவைச்சேர்ந்த சைகாந்த மற்றும் குமார் எனும் இளைஞர்களே இவ்விதம் மோதி காயத்துக்குள்ளானவர்களாவர். இருவரையும் காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனும் சாரதி அமிர்தலிங்கமும்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குச்சென்று வாக்குமூலமளித்தனர். மோதுண்ட மோட்டார் சைக்கிள் பொலிஸ்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரணைகள் தொடர்கிறது.