நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளஉள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (திருத்த) சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை கையொப்பமிடவுள்ளார்.
நீண்ட இழுப்பறிக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 74 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அரசு ஏனைய சட்டரீதியான விடயங்களை மேற்கொண்டு தமது சட்டத்தை ஒப்படைத்தால் எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளை குறித்த சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிடின் நேரடியாக அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளத் தடைகள் இருக்காது என்பதால் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக அரசின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.