அட்டன் சமனலகம பகுதியில் இன்று காலை மண்சரிவு

TODAYCEYLON
 அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட அட்டன் சமனலகம பகுதியில் 06.08.2017 .இன்று காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடு ஒன்று சேதமாகியுள்ளது.

பெய்து வரும் அடை மழை காரணமாக வீட்டின் பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீட்டின் சமயலறை மற்றும் ஒரு அறையும் பகுதியளவில் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

குடியிருப்பில் இருந்த நால்வரையும் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை அட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

6/grid1/Political
To Top