Top News

பதவிவிலக அமைச்சர் டெனீஸ்வரன் மறுப்பு

வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து வடமாகாண அமைச்சர்களை மாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் முறைகேடுகள் தொடர்பில் விசாரண செய்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.கருகுலராஜா ஆகியோர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியிருந்தனர்.
சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் மீது மீள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர்களை கட்டாய விடுவிப்பில் இருக்புகுமாறு மதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் மாகாணசபைக்குள் தமிழரசுக் கட்சி மற்றும் எதிர்கட்சியால் முதலமைச்சருக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுனரிடம் வழங்கப்பட்டு கூட்டமைப்பு தலைவர் மற்றும் மத தலைவர்கள், பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் முயற்சியால் அந்த விவகாரம் முடிவுக்கு வந்த போதும் அமைச்சரவையை முழுமையாக மாற்ற முதலமைச்சர் முடிவு எடுத்திருந்தார்.
இதனை, கூட்டமைப்பு தலைவர் மற்றும் பங்காளிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போது முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு முதலமைச்சரின் அமைச்சரவையில் அமைச்சு பதவி பெறுவதில்லை எனமுடிவெடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக வடமாகாண சுகாதார அமைச்சரான தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம் தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோ சார்பாக போட்டியிட்டு அமைச்சுப் பதவியை பெற்றிருந்தார். தற்போது ரெலோ அமைப்பும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவரிடம் உள்ள அமைச்சுப் பதவியை மீளப்பெறுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தான் பதவி விலகமாட்டேன் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்து வருவதாகவும், தன்னை பதவி விலக்க முற்பட்டால் அதனை எதிர்கொள்வது எப்படி என தனக்கு தெரியும் எனவும் அவர் கூறிவருவதாகவும் தெரியவருகிறது.
Previous Post Next Post