அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இந்தியாவில் 12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை நோயினால் அவனது ராட்சத விரல்களுடன் கை 12 அங்குலம் அளவிற்கு பெரியதாகியுள்ளதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இது சிறுவனுக்கு ஏற்பட்ட சாபம் என ஒதுக்கியுள்ளனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் தாரிக் ( வயது 12) இச்சிறுவனுக்கு பிறக்கும் போதே அரியவகை நோயின் பாதிப்பினால் அவனது கைகள் சாதரணமாக மனிதனுக்கு இருப்பதை விட பெரிய கைகளாக இருந்துள்ளது.
இதனால் தாரிக் இது தொடர்பாக சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். அவரது தந்தை இறந்ததால் பணப்பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து அவரது கைகள் தற்போது 12 அங்குலத்திற்கு பெரிய கைகளாக மாறியுள்ளது.
இதனால் அவர் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார். இது குறித்து தாரிக் கூறுகையில், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், பள்ளிகளில் தான் மறுக்கப்படுவதாகவும், மாணவர்களிடையே ஒதுக்கிவைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
நான் ஒருபோதும் இதை குணப்படுத்த முடியாது என்று நம்பவில்லை, இந்த நோயை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும், தன்னுடைய கைகள் பெரிய கைகளாக இருப்பதால், இது தனக்கு வந்த சாபம் எனவும், ஒரு சிலர் தன்னை பேய் என்று கூறுகின்றனர்.
உள்ளூர் கிராம வாசிகள் தன்னுடன் பேசுவதற்கு பயப்படுகின்றனர். ஒதுக்கி வைக்கின்றனர். நான் இந்த நிலைமையை அகற்ற விரும்புகிறேன்.
நான் ஒவ்வொரு நாட்களும் சென்று சாதாரண குழந்தைகளைப் போல விளையாட வேண்டும் என்றும் குழந்தைகளைப் போலவே இருக்க வேண்டும் எனவும் தனக்கும் சாதாரண கைகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.