கூகுள் நிறுவனத்தின் ஸ்பீச் ரெகக்னைசேன் (Speech Recognition Technology) தொழில்நுட்பத்திற்குள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கூகுளில் தேடு இயந்திரத்தில் டைப் செய்யாது, விடயத்தைப் பற்றி சொல்வதன் மூலம் அந்த சொற்களை புரிந்து கொண்டு விபரங்களை வழங்கும் முறையே இந்த ஸ்பீச் ரெகக்னைசேசன் முறையாகும்.
இந்த முறையின் கீழ் இதுவரையில் உலகின் 119 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளும் இந்த தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.