களுத்துறை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பொம்புவல பகுதியில் இரு கைதுப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இரு கைத்துப்பாக்கிகளையும் சந்தேக நபர்கள் ரூபா 80 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய வைத்திருந்த போதே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மத்துகம பகுதியைச்சேர்ந்தவர்கள் என்றும் விசாரணையின் பின்னர் குறித்த இரு நபர்களையும் களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.