வாகனங்களின் விலை குறையலாம் - காரணம் ஏன் தெரியுமா..

TODAYCEYLON
இலங்கையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,முன்னைய காலக்கட்டத்தில் கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது குறைவடைந்த காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டு கப்பல்கள் அம்பாந்தோட்டைக்கு அனுப்பப்பட்டது.இதன் காரணமாகவே இலங்கையில் வாகனங்களில் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது.
ஆனால், இனிவரும் காலங்களில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை செய்யப்படும்.மேலும், கொழும்பு துறைமுகத்திலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும்.அவ்வாறு கொழும்பில் இறக்குமதி செய்தால் வாகனங்களின் விலைகளில் குறைவு ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
6/grid1/Political
To Top