கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வும், கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியகமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகமகேவுக்கு விசேட பொலிஸ் அணிவகுப்பும் இன்று (08) மதியம் கிழக்கு மாகாண சபையில் வளாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது விசேட அமர்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் ; 19ஆவது அரசியலமைப்பு சட்டம், பொருளாதார அபிவிருத்தி, கிழக்கு மாகாணத்தில் சொந்தமான வளங்களும் அவற்றின் அபிவிருத்திகளும், கல்வி கலாச்சாரம், விவசாயம், மீன்பிடி கால்நடைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பாகவும் விசேட உரையாற்றினார்.