Top News

சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும்- ஜனாதிபதி எச்சரிக்கை!

சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் காணப்பட்ட அசுத்தங்களை இல்லாமல் செய்யவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

ஆனாலும் சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி தூய்மையான ஆட்சி ஒன்று முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.

தான் அசுத்தமான அரசாங்கத்தில் இருந்து சுத்தமான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கே வெளியே வந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி சிறிது காலத்தினுள்ளேயே இந்த அரசாங்கம் அசுத்தமடைந்துள்ளமை தொடர்பில் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

எனவே யார் என்ன கூறினாலும், எந்த சவால்கள் வந்தாலும் அரசாங்கத்தை சுத்தப்படுத்தி சுத்தமான ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கு தயாராகி உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அதிகாரம் தன்னிடமே உள்ளமையினால் தனக்கு அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய அரசாங்கத்தில் பாரிய மாற்றம் ஒன்று வெகு விரைவில் ஏற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post