கொழும்பில் தொடர்ந்தும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் போராட்டம்

TODAYCEYLON
kkk

இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய படையணி ஆரம்பித்திருக்கும் உண்ணாவிரதப்போராட்டம் இன்று 8வது நாளாகவும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெறுகிறது.
ஓய்வூதிய குறைப்பு உப்பட பல வேண்டுகோளை முன்வைத்தே அவர்கள் இந்த உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது பிரச்சினைகள் தொடர்பாக அரச தரப்பு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இது வரை சரியான தீர்வு கிடைக்கவில்லை என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியுடனோ ஜனாதிபதியின் செயலாளருடனோ பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு உடனடி ஏற்பாடொன்றை செய்து தருமாறு குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

6/grid1/Political
To Top