Top News

விஜேதாசவுக்கு ஏன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவில்லை- ஜானக விளக்கம்


விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் கொண்டு வராமைக்குக் காரணம், அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கத்தின் ஆடைய கலட்டப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயாகும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வத்கும்புர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிலைமைகளை நன்கு புரிந்துகொண்டதனால்தான், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவராமல் நீதி அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட நடவடிக்கை எடுத்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜேதாசவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்குக் காரணம் அவர் திருடினார் என்பதற்காகவல்ல. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தமைக்கு எதிராக செயற்பட்டதனால் ஆகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Previous Post Next Post