Top News

செய்த உதவிக்கு கூலிகளை பெறும் பொது பல சேனா ?

இவ்வாட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம்அதிலும் குறிப்பாகமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கனகச்சிதமாக செய்திருந்தது.அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர் பெற ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியைஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நான்கு பொலிஸ் குழுக்கள் போட்டு தேடிய ஞானசார தேரர் கடைசியில் ராஜமரியாதையுடன் பிணையில்சென்றார்.

அடுத்த கட்டமாக நேற்று பிற்பகல் மாத்தறை வேஹெஹேன பூர்வாராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்றநிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிரம விமலஜோதி தேரருக்கு தென்னிலங்கையின் பிரதானசங்கநாயக்கர் என்ற பதவிக்கான நியமன ஆவணத்தை வழங்கி வைத்துள்ளார்இவர் பொது பல சேனாஅமைப்பின் ஸ்தாபக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதுஅளுத்கமை கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில்எல்லாம் இவரே அவ் அமைப்பின் தலைவராக இருந்தார்.

பொது பல சேனா அமைப்பானது தோற்றுவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை முஸ்லிம்களுக்குவிரோதமான செயற்பாட்டையே பிரதானமாக கொண்டுள்ளது.இதன் தலைவர் எப்படியானவராக இருப்பார்என்பதை யாரும் வார்த்தைகளால் எழுதி விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனலாம்.

அந் நிகழ்வில் குறித்த தேரரை ஜனாதிபதி மைத்திரி மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்இவரை ஒழுக்கமிக்கபௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒருவராகவும் கூறியுள்ளார்ஜனாதிபதி மைத்திரியும்முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டிருப்பதால் பொது பல சேனாவின் செயற்பாடுகள்அனைத்தும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளாகவே தெரியும்அதன் முன்னாள் தலைவர்பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாட்டாளராகவும் தெரிவார்.

இவ்வாறான ஒருவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளமையானது ஆபத்தின் அறிகுறியாகும்இதனைஇவ்வாட்சிக்கு பொதுபல சேனா அமைப்பு செய்த உதவிக்கான பரிகாரமாகவும் நோக்கலாம்இன்றையஆட்சியில் பொதுபல சேனவின் சிந்தனைகள் பல அரச அங்கீகாரத்தோடு இடம்பெறுவதோடு மிகவும்நுணுக்கமான முறையில் முஸ்லிம்களை எதிர்கொள்ள முனைகிறார்களா என்ற அச்சமும் எழுகிறது.

அஹமட்
Previous Post Next Post