மேல் மாகா­ணத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட  டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டத்­தின்­போது நுளம்­புகள் பரவக் கூடிய 7 38  இடங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த பொதுச்சுகா­தார பரி­சோ­த­கர்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் தெரி­வித்­தனர்.
இந்­ந­ட­வ­டிக்­கையில் சுமார் 1200 பேர்  ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் மே லும் தெரி­வித்­தனர். இதே வேளை டெங்கு பரவும் இடங்­க­ளாக மேல், மத்­திய, வடமேல், சப்­ர­க­முவ மற்றும் தென்­மா­காணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.