“அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள உள்நாட்டு இறைவரி சட்டமூலம், வௌிநாட்டவர்களுக்கு சாதகமாகவும், இந்த நாட்டு மக்களுக்கு பாதகமானதாகவும் வரையப்பட்டுள்ளது” என, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“புதிய சட்டமூலத்தின்படி, வௌிநாட்டில் வேலைசெய்துவிட்டு தமது வருமானத்தை இங்கு கொண்டுவரும் இலங்கையர்களுக்கு, வரி விதிக்கப்படும். ஆயினும், வௌிநாட்டவர்கள் நாட்டுக்கு வௌியே தமது வருமானத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களுக்கு வரிகளில் விலக்களிப்பு கொடுக்கப்படும். இது ஒரு அறிவுப்பூர்வமான நிலையல்ல” என்றார்.