நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எம்மால் முடியுமான அளவிற்கு நல்லாட்சியை நாம் அமுல்படுத்தி வருகின்றோம். இதுவே நல்லாட்சிக்கான ஆரம்பமாகும். இனி தொடர்ந்து பயணிக்கும்.
மேலும் ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா தொடர்பில் விசாரணைகள் முடிந்து பூர்த்தியான முடிவு வந்த பின்னர் பரிசீலனை செய்து இறுதி தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நல்லாட்சியையும் சிறப்பான யுகத்தையும் ஐந்து வருடத்தில் ஏற்படுத்த இயலாது. ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஆரம்ப அடித்தளத்தை இடமுடியும். முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் பத்து வருடங்கள் தேவையாகும். ஆகையால் ஐந்து வருடம் முடிந்த பின்னர் எமது ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பதனை மக்கள் தீர்மானிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுஜித் அக்கரவத்தையின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
நவீன தொழில்நுட்பத்தின் வருகையின் ஊடாக உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொலைபேசி, இணையத்தளம் ஆகியவற்றின் வருகையின் காரணமாக சட்டம், மருத்துவத் துறை உள்ளிட்ட பலதும் மாற்றம் கண்டுள்ளன. ஆகவே இந்த மாற்றத்தை அடிப்படையாக கொண்டு எமது பயணம் அமைய வேண்டும்.
2015 ஆம் ஆண்டு புரட்சி செய்தோம். இந்த ஆட்சியின் வெற்றியின் பயனாக கடன் சுமையை நீக்கி புதிய யுகத்தை உருவாக்க வேண்டும். நல்லாட்சியை அமுல்படுத்தும் காரியங்களையும் புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்கான சமூக மாற்று வேலைத்திட்டங்களையும் இரு வருடங்களில் செய்து விட முடியாது. அவசரமாக தீர்மானங்கள் எடுத்து விடவும் முடியாது. எனினும் எமது பயணம் வேகம் குறைவாக இருந்த போதிலும் நல்லாட்சி விழுமியங்களை கட்டியெழுப்புவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்குமான பிரதான அத்திவாரத்தை இட்டு செயலாற்றி வருகின்றோம்.
அரசியல்வாதிகள் என்ற வகையில் குற்றம் இழைத்தமை உறுதியானால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது பொதுவான ஜனநாயக பண்பாகும். அதுமாத்திரமின்றி உலகின் வழமையான நடவடிக்கையாகவும் கருத முடியும். எனினும் குற்றச்சாட்டு இருக்கும் போது எவரும் அதிகாரத்தை விடுவதற்கு முனைவது குறைவாகும். முன்னைய ஆட்சியின் போது இவ்வாறான நடவடிக்கைகள் எதனையும் நாட்டு மக்கள் கண்டுக்கொள்ளவில்லை.
என்றாலும் குற்றச்சாட்டு மாத்திரம் முன்வைக்கப்பட்ட தருவாயில் இராஜனாமா செய்யும் வழிமுறையை நல்லாட்சியிலேயே அறிமுகம் செய்து வைத்துள்ளோம். நல்லாட்சி வந்த பின்னர் இரு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர். இது பாரிய முன்னேற்றம். எனவே எம்மால் முடிந்த அளவிற்கு நல்லாட்சியை அமுல்ப்படுத்தியுள்ளோம்.
இதன்படி தற்போது குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நிறைவடைந்த பின்னர் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான பூர்த்தியான முடிவு வந்த பின்னர் பரிசீலனை செய்து இறுதி தீர்மானம் எடுப்போம்.
நல்லாட்சியையும் சிறப்பான யுகமொன்றையும் ஐந்து வருடத்தில் ஏற்படுத்த இயலாது. ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஆரம்ப அடித்தளத்தை இடமுடியும். முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் பத்து வருடங்கள் தேவையாகும். ஆகையால் ஐந்து வருடம் முடிந்த பின்னர் எமது ஆட்சி நீடிக்க வேண்டுமா என்பதனை மக்கள் தீர்மானிப்பர் என்றார்.