உலகின் அதிக நினைவாற்றல் உள்ள மனிதனாக முகமது ஃபஹ்மீன்

TODAYCEYLON

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சாகுல்ஹமீது சமீமா பர்வீன் தம்பதியரின் மகன் முகமது ஃபஹ்மீன். துபாயில் உள்ள பாடசாலை ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுவன், சிறு வயது முதல் ஞாபக சக்தியில் சிறந்த விளங்கி வருகிறான். இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட பயிற்சியின் வாயிலாக பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியிருக்கிறான் இந்தச் சிறுவன்.

5 ஆயிரம் ஆண்டுகளில் எந்தத் தேதியில் என்ன கிழமை என்பதை நொடிப் பொழுதில் சொல்லியும், உலக நாடுகளில் தற்போது உள்ள நேரத்தின் விவரம், உலகில் உள்ள ஒரு நாட்டின் பெயரைச் சொன்னாலும் அந்த நாட்டின் தலைநகர், கொடி, மொழி, அங்கு புழக்கத்தில் உள்ள நாணயம் ஆகியவற்றின் பெயர் ஆகியவற்றையும், உலகில் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன்களின் மாடல், அது வெளியான தேதி, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் ஆகியன பற்றியும் சொடக்குப் போடும் நேரத்தில் சொல்லி அடிக்கிறான்.

இந்தச் சிறுவனின் அபாரத் திறமையைப் பாராட்டி இந்தியச் சாதனையாளர் புத்தகத்தில் (Indian Achievers Book of Record) அவனது பெயருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழை சிறுவனின் பெற்றோர் முன்னிலையில், அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைவாணி வழங்கினார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜனிடம் சாதனைச் சிறுவன் முகம்மது ஃபஹ்மீன் வாழ்த்து பெற்றார்.

6/grid1/Political
To Top