கடத்தல் விவகாரம் : முன்னாள் பேச்சாளர் தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு.!

TODAYCEYLON
கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி.தசநாயக்க உட்பட 5 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து இவரை மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 24 ஆம் திகத வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
6/grid1/Political
To Top